சாலை விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை தேவை
திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை
திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என கீழப்பழுவூர் கிராம மக்கள் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரனிடம் அளித்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பது:
திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக, கீழப்பழுவூர் பகுதியிலும் சுமார் 80 பேரிடம் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அதற்கு அரசு சார்பில் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட தொகை குறைவாக உள்ளது. எனவே, அரசு வழங்கவுள்ள மதிப்பீட்டுத்தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள புதுச்சாவடி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் 165 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஜன.17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.