கல்லக்குடி, காசான்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 பேர் காயம்
அரியலூர் மாவட்டம், கல்லக்குடி, காசான்கோட்டை ஆகிய இரு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 36 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம், கல்லக்குடி, காசான்கோட்டை ஆகிய இரு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 36 பேர் காயமடைந்தனர்.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர்,தஞ்சாவூர், புதுக்கோட்டை,சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 400 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் கல்லக்குடி நாகராஜன்(35), கோவிலூர் சரத்குமார்(22) உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் பலத்த காயமடைந்த கீழப்பழுவூர் மணி (47), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விக்னேஷ் (21) ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு ருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
காசான்கோட்டையில்.....
உடையார்பாளையம் அருகேயுள்ள காசான்கோட்டை கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் அரியலூர், ஜயங்கொண்டம் உடையார்பாளையம், தா.பழூர் ,திருச்சி,லால்குடி,புள்ளம்பாடி,பெரம்பலூர், புதுகோட்டை,சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 600 காளைகள் கலந்துகொண்டன. 200 மாடுபிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். இதில் காளைகள் முட்டியதில் சமயபுரம் நந்தகுமார் (34), பெரம்பலூர் விஜயன் (35), புதுக்கோட்டை தங்கதுரை (21),மளத்தான்குளம் ஜெனித் (23) உள்ளிட்ட 27 பேர் காயமடைந்தனர்.
இவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த வீரர்கள் அரியலூர்,ஜயங்கொண்டம்,தா.பழூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்,பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.