சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய அழைப்பு
அரியலூர் மாவட்டம், செந்துறை வருவாய் கிராமங்களான அசாவீரன்குடிக்காடு, மணபத்தூர், குழுமுர், வஞ்சினபுரம்
அரியலூர் மாவட்டம், செந்துறை வருவாய் கிராமங்களான அசாவீரன்குடிக்காடு, மணபத்தூர், குழுமுர், வஞ்சினபுரம், செந்துறை சன்னாசிநல்லூர், தளவாய், அயன்தத்தனூர், நமங்குனம், நக்கம்பாடி, ஆனந்தவாடி ஆகிய கிராமங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் அதனால் விதைக்க இயலாமை மற்றும் பூச்சி, நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்பிற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு தொகை வழங்கப்படும் .
எனவே நெல் பயிரிடும் விவசாயிகள் ரபீ பருவத்திற்கு வரும் நவ. 30-க்குள் அருகிலுள்ள தேசிய வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம்,அல்லது மத்திய அரசின் அனுமதி பெற்ற பொதுச் சேவை மையத்திலோ பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என செந்துறை வட்டார வேளாண் உதவி இயக்குநர் நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
வேலும் விவரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள் பாரி-9047874495, ஆனந்தி-90477 92391, மலர்கொடி-9787483625, ஒளிச்செல்வி- 6379419263, ராஜா -9943519833 ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.