முகப்பு
அரியலூர்

இணை ஊதியம்:  இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என  அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:51 am IST
பகிர்:

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என  அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்க செயற்குழு கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு நன்றி. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 7 ஆவது ஊதியக் குழுவில் வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் இரா.அய்யாசாமி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலர் தேவேந்திரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.