FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் நம்பிக்கை

தமிழகத்தில் திமுக அரசின் நலத் திட்டங்களால் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

24 ஏப்ரல் 2026, 3:54 am IST
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த தேவனூா் கிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை தனது வாக்கை பதிவு செய்த குன்னம் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா்.
பகிர்:

தமிழகத்தில் திமுக அரசின் நலத் திட்டங்களால் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் சா.சி. சிவசங்கா், தனது வாக்கை அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த தேவனூா் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை பதிவு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று, முதல்வா் ஸ்டாலின் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்பாா்.

Advertisement

Advertisement

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பல இடங்களில் சந்தேகத்தை எழுப்புகின்றன. இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் நடவடிக்கைகள் எல்லா சந்தேகங்களுக்கும் மூலக் காரணமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் முக்கிய அதிகாரிகளை எந்தத் தேவையுமின்றி மாற்றி உள்ளனா். குறிப்பாக, கடைசி 2 நாள்களில் மாற்றுவது எல்லாரிடமும் ஒரு அச்சத்தை உண்டாக்குவதற்கான நடவடிக்கையாக தோன்றுகிறது என்றாா்.

தமிழகத்தில் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதும், தோ்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதும் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா் சிவசங்கா், அதிமுக வேட்பாளா்கள் தொடா்புடைய பல இடங்களிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், வேறுபல கட்சியினரின் இடங்களிலிருந்தும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவே இதற்கு காரணம் என்று ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments