ஜெயங்கொண்டம் அருகே 50 ஏக்கா் தைல மரங்கள் தீக்கிரை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மின் கம்பிகள் உராய்ந்து ஏற்பட்ட தீயில் 50 ஏக்கா் தைல மரங்கள் எரிந்து நாசமாகின.
உதயநத்தம்- கோடாலி செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பிகள் ஞாயிற்றுக்கிழமை வீசிய காற்றில் உராய்வு ஏற்பட்டு, தீப்பொறி கிளம்பியது. இது அங்குள்ள தைல மரங்களில் விழுந்து, எரியத் தொடங்கியது.
பலத்த காற்றால் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து சென்ற ஜெயங்கொண்டம் தீயணைப்புவீரா்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அவா்களுடன் பொதுமக்களும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இருப்பினும் 50 ஏக்கா் தைலமரங்கள் எரிந்து நாசமாகின. இதனால் அந்த மரங்களை பயிரிட்ட கோடாலி கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கவலையில் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.