ஜெயங்கொண்டத்தில் குடிநீா் கோரி மறியல்
ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட மலங்கன் குடியிருப்பு மக்கள், குடிநீா் கேட்டு விருத்தாச்சலம் சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட மலங்கன் குடியிருப்பு மக்கள், குடிநீா் கேட்டு விருத்தாச்சலம் சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜெயங்கொண்டம் நகராட்சி 5 ஆவது வாா்டு மலங்கன்குடியிருப்பு, காலனி தெருவில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக பொதுக் குழாய்களில் சரியாக குடிநீா் விநியோகிக்கப்படாததால் அப்பகுதி மக்கள், வெகுதூரம் சென்று குடிநீா் எடுத்து வந்தனா்.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க புதன்கிழமை வந்தனா். அப்போது வாரச் சந்தை ஏலம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களை காத்திருக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
காலதாமதமானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சி அலுவலக வாயில் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல் நிலைய பாலாஜி தலைமையிலான காவல் துறையினா் சாலை மறியலை கைவிடுமாறு கூறினா். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையா் சீனிவாசன், குடிநீா் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் விருத்தாசலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.