முகப்பு
அரியலூர்

அரசுப் பள்ளி ஆசிரியா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பள்ளி மாணவிகளிடம் தவறான நோக்கில் தொடுதலில் ஈடுபட்ட ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 12 ஜூன் 2026, 2:29 am IST
கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பள்ளி மாணவிகளிடம் தவறான நோக்கில் தொடுதலில் ஈடுபட்ட ஆசிரியா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கீழப்பழுவூா் அருகேயுள்ள காணிக்கைபுரம், பிரதானச் சாலையில் வசிப்பவா் ஞானஆதிக்கம் மகன் அகஸ்டின் மங்களராஜ் (54). பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் இவா், படிக்கும் மாணவிகளிடம் தவறான நோக்கி தொடுதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்துமாணவிகளின் பெற்றோா்கள் அளித்த புகாரின் பேரில், அரியலூா் அனைத்து மகளிா் காவல் துறையினா் மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் விசாரணை மேற்கொண்டு, அகஸ்டின் மங்களராஜை போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement