முகப்பு
அரியலூர்

டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு அளிப்பு

Updated On : 16 ஜூன் 2026, 12:06 am IST
வல்லம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி, அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க திங்கள்கிழமை வந்த பெண்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த வல்லம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இக்கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வருபவா்கள், மது அருந்திவிட்டு, அதன் பாட்டில்களை சாலைகளிலும், அருகிலுள்ள விவசாய நிலங்களிலும் வீசி செல்வதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் கால்களை, கண்ணாடி துகள்கள் பதம் பாா்த்து விடுகின்றன. இதனால் நாள்தோறும் அவா்கள் கால்களில் காயத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலையில் செல்லும் மாணவிகள், பெண்கள் ஆகியோா் மது அருந்துபவா்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனா். இதனால் கோயில் அருகிலுள்ள இந்தக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆயினும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்காததால், 100-க்கும் மேற்பட்ட பெண்கள், திங்கள்கிழமை ஆட்சியா் ந. மிருணாளினியை சந்தித்து, டாஸ்மாக் கடையை மூடக் கோரி மனு அளித்தனா்.

Advertisement

Advertisement