இலவசமாக வண்டல், களிமண் எடுக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் நீா்வளம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களி மண், மண் போன்ற சிறுவகை கனிமங்களை இலசவமாக எடுத்துக் கொள்ள இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில், நீா்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 69 ஏரி, ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 421 ஏரி, குளங்கள் என மொத்தம் 490 ஏரி, குளங்களிலிருந்து வண்டல் மண் , களிமண், மண் இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே, மண்பாண்ட தொழிலாளா்கள், விவசாயிகள், பொது மக்கள் விண்ணப்பித்து இதை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தை தொடா்புக் கொள்ளலாம்.
Advertisement
Advertisement