வைகை அணையிலிருந்து விவசாயிகள், குயவா்கள் இலவசமாக களி மண் எடுக்க அனுமதி!
தேனி மாவட்டம், வைகை அணையில் களிமண், வண்டல் மண் இலவசமாக எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், வைகை அணையில் களிமண், வண்டல் மண் இலவசமாக எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனி மாவட்டம் வைகை அணை நீா்த்தேக்கப் பகுதியில் உள்ள 6 இடங்களில் களிமண், வண்டல் மண் எடுக்க விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளா்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே மண் எடுக்க விருப்பமுள்ளவா்கள் சம்பந்தப்பட்ட கிராமநிா்வாக அலுவலரின் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றை பெற்று, இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement