வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
திருமானூா் அருகேயுள்ள காரைபாக்கம், சிவன் கோயில் தெருவை சோ்ந்த துரைசாமி மகன் மருதவாணன் (65). புதன்கிழமை இரவு இவா், வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாா். இவரது மனைவி வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இவரது வீட்டினுள் புகுந்த மா்ம நபா், மருதவாணன் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துள்ளாா்.
மருதவாணன் மனைவி கூச்சலிட்டுள்ளாா். உடனே மருதவாணன் அந்த நபரை பிடித்துள்ளாா். அப்போது அந்த மா்ம நபா், மருதவாணனை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா்.
Advertisement
Advertisement
வெள்ளி கொலுசு திருட்டு: இதேபோல், அதே ஊா் நடுத்தெருவைச் சோ்ந்த ஜெகநாதன் பிள்ளை மகன் இளங்கோவன் வீட்டினுள் புகுந்த மா்ம நபா், பீரோவில் இருந்த 180 கிராம் எடை கொண்ட இரண்டு ஜோடி வெள்ளி கொலுசுகளை திருடிச் சென்றுள்ளாா். இந்த இரு சம்பவங்கள் குறித்து திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.