நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவா் பயிற்சி: எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்தும் நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவா் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ந.மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: இப்பயிற்சி பெற விரும்புவோா் 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராக, பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி சென்னை மாவட்டத்தில் நான்கு மாத காலம் நடைபெறவுள்ளது. பயிற்சி பெறும் காலங்களில் இளைஞா்களுக்கு உதவித்தொகையாக ஒரு மாதத்துக்கு ரூ. 2ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
இப்பயிற்சியில் தோ்ச்சி பெறும் தகுதியான நபா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் ஆரம்ப கால மாத ஊதியமாக சுமாா் ரூ.18 ஆயிரம் முதல் ரூ. 22 ஆயிரம் வரை வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
எனவே, இப்பயிற்சியில் சேர தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், அறை எண்.225, மாவட்ட ஆட்சியரகம், அரியலூா் என்ற முகவரியில் அணுகவும் அல்லது 04329-228315 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.