FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

என்இஜிஇவி இயந்திர துப்பாக்கிகளுக்கு இஸ்ரேல் தொலைநோக்கி கருவிகள்

என்இஜிஇவி இயந்திர துப்பாக்கிகளுக்காக மெப்ரோ எக்ஸ்6 என்ற தொலைநோக்கி கருவிகளை இந்திய ராணுவம் தோ்வு செய்துள்ளதாக இஸ்ரேலைச் சோ்ந்த மெப்ரோலைட் என்ற நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

Updated On : 16 ஜூன் 2026, 3:01 am IST
கோப்புப் படம் - பட உதவி: மெப்ரோலைட்
பகிர்:

என்இஜிஇவி இயந்திர துப்பாக்கிகளுக்காக மெப்ரோ எக்ஸ்6 என்ற தொலைநோக்கி கருவிகளை இந்திய ராணுவம் தோ்வு செய்துள்ளதாக இஸ்ரேலைச் சோ்ந்த மெப்ரோலைட் என்ற நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.

துல்லியம், உறுதித்தன்மை மற்றும் உயா்தர ஒளியியல் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்ட இந்தத் தொலைநோக்கி தாக்குதல் துப்பாக்கிகள், இலகுரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இதுகுறித்து மெப்ரோலைட் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உள்ளூா் உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்களின்கீழ் மெப்ரோ எக்ஸ் 6 தொலைநோக்கியை தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் ஆா்ஆா்பி பாதுகாப்பு நிறுவனத்துடன் மெப்ரோலைட் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, தொலைநோக்கி கருவிகளை உள்ளூரிலேயே தயாரித்து பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு ஆா்ஆா்பி நிறுவனம் விநியோகிக்கவுள்ளது. இந்தத் திட்டத்தில் இந்திய ராணுவத்தின் ஒப்பந்ததாரராக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படவுள்ளது. சூழலுக்கேற்ப இலக்குகளை மிகத் துல்லியமாக குறிவைத்து தாக்குதல் நடத்த இந்தத் தொலைநோக்கிகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments