விவோ டி5எக்ஸ் ஃப்யூசன் ரெட் அறிமுகம்... என்னென்ன எதிர்பார்க்கலாம்?
அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ டி5எக்ஸ் ஸ்மார்ட் போனை பற்றி...
விவோ டி5எக்ஸ் மாடலின் ஃபியூஷன் ரெட் வண்ண மாடலை இந்தியாவில் விவோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள விவோ நிறுவனம், நாள்தோறும் நீண்ட நேரம் மொபல் பயன்படுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு அதிக பேட்டரி, எளிய செயல்திறன்களுடன், விவோ டி5எக்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 'சைபர் கிரீன்' மற்றும் 'ஸ்டார் சில்வர்' வண்ணங்களில் வெளியான நிலையில், இன்று ஃப்யூசன் சிவப்பு நிறத்தில் வெளியாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த ஸ்மார்ட்போனில் 6.74 அங்குல தொடுதிரை, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 570 நிட்ஸ் ஒளிப் பிரகாசம் வழங்கப்பட்டுள்ளது. கண் சோர்வை குறைக்கும் ஸ்லீப் கம்பர்ட் மோட், ஈரமான அல்லது எண்ணெய் படிந்த கைகளாலும் திரையை எளிதாக பயன்படுத்தும் வசதியும் இடம் பெற்றுள்ளன.
கேமராவில், 8 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
5,500 mAh பேட்டரியுடன் வரும் இந்த போன், 15 வாட்ஸ் டைப்-சி பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. பேட்டரியின் செயல்திறன் நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவோ டி5எக்ஸ்ஸின் விலை, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளக சேமிப்பு வசதி கொண்ட அடிப்படை மாடல் ரூ. 18,999-இல் இருந்து தொடங்குகிறது. அதேநேரத்தில் 8ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 256ஜிபி மாடலும் கிடைக்கிறது. இவற்றின் விலைகள் முறையே ரூ. 20,999 மற்றும் ரூ. 22,999.
Vivo introduced a Fusion Red colourway of the Vivo T5x 5G in India on Tuesday. The handset was initially launched in the country in March in Cyber Green and Star Silver colour options.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.