FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை!

சென்னையில் இன்று அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அனைத்துச் செல்போன்களிலும் அலாரம் ஒலியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை(ரெட் அலர்ட்) குறுஞ்செய்தி வந்துள்ளது.

18 அக்டோபர் 2026, 3:21 pm IST
சென்னைக்கு ரெட் அலர்ட்
பகிர்:

சென்னையில் இன்று அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அனைத்துச் செல்போன்களிலும் அலாரம் ஒலியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை(ரெட் அலர்ட்) குறுஞ்செய்தி வந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 6 இடங்களில் அதி கனமழை பெய்துள்ள நிலையில், இன்றும் அதே நிலை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று 200 மில்லிமீட்டருக்கும் அதிகமாக அதி கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதோடு, இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படலாம் என்பதால் சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக உஷார்படுத்தப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனடியாக உஷார்படுத்தும் நவீன தொழில்நுட்ப முறைப்படி, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து செல்போன் எண்களுக்கும் எச்சரிக்கை ஒலியுடன் கூடிய அவசரகாலக் குறுஞ்செய்தி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அனுப்பப்பட்டு உள்ளது.

அந்தக் குறுஞ்செய்தியில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத் தணிப்புப் பணிகள், மரங்களை அகற்றும் இயந்திரங்கள், நிவாரண மையங்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அனைத்தும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் இந்தத் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

summary

Following the heavy rainfall warning in Chennai today, a red alert text message with an alarm sound has been received on all mobile phones.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments