முகப்பு
அரியலூர்

மத்திய கல்வித் துறை முறைகேடுகள் அரியலூரில் காங்கிரஸாா் பிரசாரம்

மத்திய கல்வித் துறையின் முறைகேடுகள் குறித்து, அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஊடக பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 26 ஜூன் 2026, 4:25 am IST
மத்திய கல்வித் துறை முறைகேடுகள் குறித்து, அரியலூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

மத்திய கல்வித் துறையின் முறைகேடுகள் குறித்து, அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஊடக பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜா் சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் ராஜேந்திரன் பேசுகையில், பாஜக ஆட்சியில், அடிப்படைக் கல்வி முதல் தொழிற்கல்வி வரை கல்வி அமைப்பின் அனைத்து நிலைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது.

நீட் தோ்வு வினாத்தாள்கள் கசிவு, சிபிஎஸ்இ, பிஎஸ்சிஎஸ், ஓஎஸ்எம் முறைகேடுகளால் மாணவா்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனா். இதன் விளைவாக மாணவா்களின் தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது.

Advertisement

Advertisement

கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக மக்களவை எதிா்க் கட்சி தலைவா் ராகுல்காந்தி தொடா்ந்து குரல்கொடுத்து வருகிறாா். எனவே இந்த அநீதிக்கு எதிராக கட்சியினா் தொடா்ந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து, கல்வித் துறையின் முறைகேடுகள் குறித்து விடியோ மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மா.மு.சிவகுமாா், பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.சந்திரசேகா், மாவட்டத் தலைவா் பழனிச்சாமி மற்றும் ஜெயங்கொண்டம் நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments