காவிரி: ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூ.கட்சியினர் 35 பேர் கைது
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கரூரில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கரூரில் ரயில் மறியலுக்கு முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 35 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை காலை ரயில் மறியல் போராட்டத்திற்கு தயாராகினர். முன்னாள் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் நா.பெரியசாமி தலைமையில் அக்கட்சியினர் காலை 11 மணியளவில் கரூர் ரயில்நிலையம் நுழைவுவாயில் முன் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டவாறு ரயில்நிலையம் நோக்கி விரைந்து எர்ணாகுளம் - நாகர்கோவில் ரயிலை மறிக்க முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகர துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா தலைமையிலான போலீஸார், கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழுவின் எம்.ஷேஷன், பி. பாலன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் புஷ்பா உள்ளிட்ட 35 பேரைக் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.