நாய் குறுக்கே வந்ததில் பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு
நாய் குறுக்கே ஓடியதால் பைக்கில் இருந்து நிலைத்தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாய் குறுக்கே ஓடியதால் பைக்கில் இருந்து நிலைத்தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரூர் மண்மங்கலம் நெரூர் வடக்கு பழையூரைச் சேர்ந்தவர் குணசேகரன்(54). இவர், கடந்த 1 ஆம் தேதி தனது பைக்கில் பரமத்திவேலூர் - வாங்கல் சாலையில் கடம்பங்குறிச்சி தேவாலயம் அருகே சென்றபோது திடீரென நாய் குறுக்கே ஓடியுள்ளது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார். வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.