பழுதாகி நின்ற லாரி மீது எதிரே வந்த லாரி மோதல்: ஓட்டுநர் சாவு
ஏமூர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியதில், லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏமூர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியதில், லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் சேத்தியார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(55). லாரி ஓட்டுநர். இவர் செவ்வாய்க்கிழமை தனது லாரியில் கரூரை அடுத்த ஏமூர் அருகே வந்துகொண்டிருந்தபோது பழுதானதால் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு லாரி முன்புறம் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரகாஷ் ஓட்டிவந்த டாரஸ் லாரி, ஜெயச்சந்திரன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் பிரகாஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.