பேருந்து மோதி இளைஞர் சாவு
கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகிலுள்ள குமாரவாடியைச் சேர்ந்த கருப்பையா மகன் பிரதீப் (24). ஞாயிற்றுக்கிழமை கரூர் மாவட்டம், மாயனூர் அருகிலுள்ள கிளிஞ்சநத்தத்தில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.மீண்டும் ஊருக்குச் செல்வதற்காக கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது, எதிரே வந்த அரசுப் பேருந்து பிரதீப் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து, கோவை மாவட்டம், போத்தனூரைச் சேர்ந்த ஓட்டுநர் செந்தில்குமாரை(42) கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.