ஆண்டாங்கோவிலில் நவ.8-இல் மின் தடை
ஆண்டாங்கோயில் பகுதியில் நவம்பர் 8 ஆம் தேதி மின்சாரம் நிறுத்தப்படும்.
ஆண்டாங்கோயில் பகுதியில் நவம்பர் 8 ஆம் தேதி மின்சாரம் நிறுத்தப்படும்.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் எஸ்.செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனால் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.