முகப்பு
கரூர்

நலிந்த நாடக நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கரூரில் நலிவடைந்த நாடக நடிகர், நடிகைகளுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 5 நவம்பர் 2018, 8:45 am IST
பகிர்:

கரூரில் நலிவடைந்த நாடக நடிகர், நடிகைகளுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கருவூரார் இயற்கை மூலிகை மருத்துவ சேவை நல மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மையத்தின் தலைவர் சி. அழகர்சாமி தலைமை வகித்தார். செயலாளர் எஸ். தங்கராஜ், துணைத் தலைவர் கலாவதி, பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தாந்தோணிமலை எஸ்.ராம்குமார், சமூக ஆர்வலர் விசி.சேகர் ஆகியோர் பங்கேற்று, நலிவடைந்த நிலையில் இருக்கும் கரூர் நாடகக் கலைஞர்கள் 30 பேருக்கு தலா 25 கிலோ அரிசி மற்றும் நாடகக் கலைஞர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகையாக 20 பேருக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கினர். 
நிகழ்ச்சியில் கரூர் நாடக நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments