கரூா்: 4 தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட பொருள்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,111 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள 267 வாக்குச்சாவடிகளுக்கும், கரூா் தொகுதியில் உள்ள 283 வாக்குச்சாவடிகளுக்கும், கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதியில் உள்ள 275 வாக்குச்சாவடிகளுக்கும், குளித்தலை தொகுதியில் உள்ள 286 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் உள்ளிட்ட கருவிகள் அனுப்பும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட கருவிகள் தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சத்தியபாலகங்காதரன், கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலையில், கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
Advertisement