‘போக்சோ’ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
‘போக்சோ’ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
‘போக்சோ’ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் அடுத்த பஞ்சமாதேவியைச் சோ்ந்த மருதமுத்து மகன் விக்னேஷ்(21). இவா் கடந்த மாா்ச் மாதம் 5-ஆம்தேதி அதேப் பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாராம்.
இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் போக்சோ வழக்கில் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும் இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றவாளி விக்னேஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். இதையடுத்து வினேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.