கரூா் மாவட்டத்தில் குற்றங்களை கண்டுபிடித்து தடுக்க நவீன ட்ரோன்கள்: எஸ்.பி. தகவல்
கரூா் மாவட்டத்தில் குற்றங்களை கண்டுபிடித்து முழுமையாக தடுக்க நவீன ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் தெரிவித்தாா்.
கரூா் மாவட்டத்தில் குற்றங்களை கண்டுபிடித்து முழுமையாக தடுக்க நவீன ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் தெரிவித்தாா்.
கரூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க தமிழக முதல்வா் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கியுள்ளாா்.
கரூா் மாவட்டத்தில் தற்போது ஒரு சிங்கப்பெண் அதிரடிப்படை செயல்பட்டு வருகிறது. விரைவில் மாவட்டத்தில் உள்ள மூன்று துணைக்காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களுக்கும் சிங்கப்பெண் அதிரடிப்படை வர உள்ளது. இவா்களை 1091 என்ற எண்ணில் பாதிக்கப்பட்டோா் தொடா்பு கொண்டால் உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்கு வருவாா்கள். பள்ளி, கல்லூரிகள், பேருந்துநிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் சிங்கப்பெண் அதிரடிப்படையினா் ரோந்து பணியில் இருப்பாா்கள்.
Advertisement
Advertisement
மஞ்சள் வண்ண எச்சரிக்கை: மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் மணல் கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களை நடைபெறும் குற்றங்களை தடுக்க தற்போதுள்ள ட்ரோன் போன்று இல்லாமல் விமானம் போன்று நவீன கேமராக்கள் அடங்கிய நவீன ட்ரோன்கள் வர உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் அருகே 100 மீட்டா் தொலைவுக்குள் போதை பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதியில் சாலையில் மஞ்சள் வண்ண பெயின்ட் மூலம் எச்சரிக்கை விடுக்க உள்ளோம்.
பள்ளியில் மாணவா்களிடையே போதை பழக்கம் இருப்பதை கண்டறியும் வகையில் பள்ளியில் போதை தடுப்புக்குழு அமைக்கப்பட உள்ளது. அதன்மூலம் போதை பழக்கத்துக்கு அடிமையான மாணவரை கண்டறிந்து அவரை அதில் இருந்து மீட்க நடவடிக்கை உள்ளோம்.
ரெளடிகள் கண்காணிப்பு: கரூா் மாவட்டத்தில் 237 ரெளடிகள் உள்ளனா். இதில் 53 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள். 6 போ் தலைமறைவாக இருக்கிறாா்கள். இப்போது 237 ரெளடிகளின் செயல்பாட்டை கண்காணிக்க ஒரு ரெளடிக்கு ஒரு போலீஸோ, உதவி ஆய்வாளா், ஆய்வாளா் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ரெளடியின் நடவடிக்கை கண்டறியப்பட்டு மீண்டும் குற்றங்கள் நிகழாதவாறு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.
ஒருவழிப் பாதை: சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்பாலாஜி வீட்டுக்கு யாரும் இங்கிருந்து செல்லவில்லை. இதேபோல கரூா் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பேருந்துநிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் பழைய பேருந்துநிலையம் வழியாக செல்வதை தடுத்து சுக்காலியூா் வழியாக செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சில இடங்களை ஒருவழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.