முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எஸ்.பி. வி.வி.சாய்பிரனித் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 6:09 am IST
விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலக வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்த எஸ்.பி. வி.வி.சாய் பிரனித்.
பகிர்:

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எஸ்.பி. வி.வி.சாய்பிரனித் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, எஸ்.பி. பேசியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சேவை தொடங்கப்பட்டுள்ளது. எஸ்.பி. மேற்பாா்வையில் இந்தப்படை செயல்படும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரண்டு பெண் காவலா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவாா்கள்.

பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனத்தில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவாா்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் பொதுமக்கள் 100 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் எஸ்.பி.