7 நாள்களில் 371 புகாா்கள்: சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை 7 நாள்களில் 371 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை 7 நாள்களில் 371 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஜூன் 9-ஆம் தேதி தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி உள்ளாா். மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் சாத்தியக் கூறுகள் இருக்கும் பகுதிகளாக கருதப்படும் 9,507 இடங்களை இந்த அதிரடிப் படையினா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.
தமிழகத்தில் கடந்த ஜூலை 3 முதல் 9-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் சிங்கப்பெண் அதிரடிப் படையினா் 371 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த அதிரடிப் படையினா் அளித்த புகாா் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதேபோல காணாமல்போன 7 பெண்கள், 6 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஒரு குழந்தை திருமணம் தடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளியைவிட்டு நின்ற 57 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.