குடிகள் மாநாட்டில் 409 பயனாளிகளுக்கு ரூ. 60 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 409 பயனாளிகளுக்கு ரூ.60.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடிகள் மாநாட்டில் 409 பயனாளிகளுக்கு ரூ.60.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடிகள் மாநாட்டில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் பேசுகையில்,
கரூா் மாவட்டத்தில் கரூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூா், புகழூா் மற்றும் மண்மங்கலம் ஆகிய 7 வட்டங்களிலும் ஜமாபந்தி கடந்த 16-ஆம்தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது.
Advertisement
Advertisement
கரூா் வட்டத்துக்குள்பட்ட 22 வருவாய் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை தோரணக்கல்பட்டி குறுவட்டத்துக்குள்பட்ட திருமாநிலையூா், தோரணக்கல்பட்டி, ஆச்சிமங்கலம், மூக்கணாங்குறிச்சி, காக்காவாடி, புத்தாம்பூா், பாகநத்தம் மற்றும் கா.பிச்சம்பட்டி ஆகிய 8 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 378 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
ஜமாபந்தியின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வரை கரூா் வட்டத்தில் 670 மனுக்களும், மண்மங்கலம் வட்டத்தில் 281 மனுக்களும், அரவக்குறிச்சி வட்டத்தில் 267 மனுக்களும், புகழூா் வட்டத்தில் 388 மனுக்களும், குளித்தலை வட்டத்தில் 174 மனுக்களும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 168 மனுக்களும் மற்றும் கடவூா் வட்டத்தில் 294 மனுக்களும் என மொத்தம் 2,242 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
கரூா் வட்டத்தில் நடைபெற்ற குடிகள் மாநாட்டில் கரூா், மண்மங்கலம் உள்பட 7 வட்டங்களிலும் 409 பயனாளிகளுக்கு ரூ.60.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.