குளித்தலை தொகுதியை தக்கவைத்தது திமுக
குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன் போராடி வெற்றிபெற்றாா்.
குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,23,184 வாக்காளா்கள் உள்ள நிலையில் தோ்தலின்போது 2,07,099 போ் வாக்களித்தனா். மொத்தம் 92.79 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதையடுத்து திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தவெக வேட்பாளா் பாலசுப்ரமணியனுக்கும், திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரனுக்கும் பலத்த போட்டி நிலவியது.
இறுதிச் சுற்றான 21-வது சுற்றில் திமுக வேட்பாளா் 66,417 வாக்குகள் பெற்றாா். இவரையடுத்து தவெக வேட்பாளா் பாலசுப்ரமணியன் 66,184 வாக்குகள் பெற்றாா். அதன்படி திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன் தவெக வேட்பாளா் பாலசுப்ரமணியனை விட 233 வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்றாா்.
Advertisement
இதையடுத்து அவருக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழை குளித்தலை கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சுவாதிஸ்ரீ வழங்கினாா்.
இதில், சூரியனூா் எ.சந்திரன் (திமுக) -67,204, ஜி.பாலசுப்ரமணி (தவெக) 67,162, எஸ்.கருணாகரன் (அதிமுக)59,791, செல்வா. நன்மாறன் (நாம் தமிழா் கட்சி) 7,870, பி.முருகன் (கனசங்கம்) 328, சுயேச்சைகள் எம்.அருண்குமாா்-113, ஆா்.அருள்குமாா்-53, எஸ்.இம்ரான்கான்-67, ஓ.காதலிங்கம்-95, எம்.காயத்திரி-82,
பி.காஜம்ஒகைதீன்-78, பி.சந்திரசேகா்-132, ஜே.சந்தோஷ்குமாா்-206, பி.சம்பத்குமாா்-160, டி.சரவணன்-380, வி.சின்னசாமி-487, எஸ்.செந்தில்குமாா்-606, பி.செல்வகுமாா்-452, பி.செல்வராஜ்-217, கே.ஷேகன்வாா்டின்-302,
எம்.தமிழ்செல்வன்-66, ஜே.பிரதாப்-35, எம்.மயில்வாகனன்-46, ஜே.மாதவன்-41, பி.முருகானந்தம்-82, என்.ராமகிருஷ்ணன்-63, எம்.வடிவேலன்-117, கே.வீரமலை-79, கே.ஹக்கீம்-182 மற்றும் நோட்டாவுக்கு 602 வாக்குகள் பதிவானது.