முகப்பு
பெரம்பலூர்

மானியத்தில் சொட்டுநீர்,  தெளிப்பு நீர்பாசனம் அமைக்கலாம்

பெரம்பலூர் வட்டாரத்தில் மானியத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:25 am IST
பகிர்:

பெரம்பலூர் வட்டாரத்தில் மானியத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பெரம்பலூர் வட்டாரத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், மானியத்தில் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத் தூவான் ஆகியவற்றை அரசு மானிய விலையில் அமைப்பதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. 
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் தங்களுடைய நில உடமை ஆவணங்களான சிட்டா, அடங்கல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை, மண் மற்றும் தண்ணீர் ஆய்வறிக்கை ஆகியவற்றுடன் பெரம்பலூரில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments