ஐயப்ப சேவா சங்கக் கூட்டம்
திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சபரி மலையின் பாரம்பரியத்தை காக்கவும், அனைத்து வயது
திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சபரி மலையின் பாரம்பரியத்தை காக்கவும், அனைத்து வயது பெண்களும் கோயிலுக்குச் செல்ல அனுமதி என்ற நிலை மாறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகம் அருகே நடைபெற்ற கூட்டு பிரார்த்தனை மற்றும் விளக்கக் கூட்டத்துக்கு, திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். பொறுப்பாளர் செந்தில்குமார், வட்ட ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், பாலகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.