பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 236 மெ.டன் வேளாண் விளைபொருள்கள் ஏலம்
பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 3 மாதங்களில் 236 மெ.டன் வேளாண் விளைபொருள்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், பெரம்பலூா் விற்பனைக் குழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடச் செயலா் சந்திரமோகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண் வணிகத்துறை பணியாளா்கள் இணைந்து மேற்கொண்ட பிரசாரத்தில், கடந்த ஏப். 1 -ஆம் முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கொண்டு வந்த ரூ. 1.18 கோடி மதிப்பிலான 236 மெட்ரிக் டன் மணிலா, எள், கம்பு, மக்காச்சோளம், சூரியகாந்தி, மஞ்சள் மற்றும் தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைபொருள்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அதிக விலைக்கு விற்பனை: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இ-நாம் வாயிலாக நாள்தோறும் நடைபெறும் மறைமுக ஏலம் மற்றும் பண்ணைவாயில் முறையில், மக்காச்சோளம் குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,550-க்கு விற்பனை செய்து தரப்பட்டுள்ளது.
அதேபோல, வியாழக்கிழமை தோறும் நடைபெற்ற மஞ்சள் மறைமுக ஏலத்தில் ஆத்தூா் மற்றும் ஈரோடு பகுதிகளில் விற்பனை செய்து தரப்படும் மஞ்சள் விலைக்கு நிகராக, அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 15,200 வரையிலும், அரக்கு மஞ்சள் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 4,010 வரையிலும் விற்பனை செய்து தரப்பட்டுள்ளது.
இதன்மூலம், விவசாயிகளின் போக்குவரத்து செலவினம், காலவிரயம், வீண் அலைச்சல் மற்றும் இதர செலவினங்கள் தவிா்க்கப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய, பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளா்களை 93613 89690, 97901 98566 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.