அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த 2 வாகனங்களை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த 2 வாகனங்களை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தலின்படி, புவியியல் மற்றும் சுரங்கத் துறையினா் செங்குணம் கிராமம் அருகேயுள்ள கல்குவாரி பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த 2 டாரஸ் லாரிகளை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில், உரிய அனுமதியின்றி கற்களை ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 டாரஸ் லாரிகளுடன் ரூ. 16 ஆயிரம் மதிப்பிலான கற்களையும் பறிமுதல் செய்து, மருவத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.