FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

சவுடு மண் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை அருகே அனுமதிச்சீட்டின்றி சவுடு மண் ஏற்றி வந்த 7 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 8 ஜூன் 2026, 4:00 am IST
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே அனுமதிச்சீட்டின்றி சவுடு மண் ஏற்றி வந்த 7 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் சாலையில் கனிம வளத்துறை உதவி இயக்குநா் பென்னாட் தலைமையில் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆத்துப்பாக்கம் கிராமம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த 7 டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது இதற்குரிய அனுமதி சீட்டு கேட்டபோது காலாவதியான அனுமதி சீட்டை கொடுத்துள்ளனா். இதைப் பாா்த்ததும் ஓட்டுநா்கள் 7 பேரும் லாரியை சுற்றிப் பாா்ப்பது போல் தப்பியோடினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் 7 லாரிகளையும் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநா்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments