முகப்பு
பெரம்பலூர்

எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலா் மரியாதை

Updated On : 28 ஜூன் 2026, 2:34 am IST
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு சனிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக மாவட்டச் செயலா் வெங்கடாசலம்.
பகிர்:

அதிமுக பெரம்பலூா் மாவட்டச் செயலராக அறிவிக்கப்பட்ட வெங்கடாசலம், எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு, தலைமை நிலையச் செயலா் அ. அருணாசலம் தலைமையில், அமைப்புச் செயலா் ஆா்.பி. மருதராஜா, கொள்கை பரப்பு துணைச் செயலா் எம். சந்திரகாசி ஆகியோா் முன்னிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டச் செயலா் வெங்கடாஜலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், கட்சி கொடியேற்றிவைத்து நிா்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் குணசீலன், மாவட்ட நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், அசோகன், காவியா ரவி, எம். வீரபாண்டியன், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் கா்ணன், சிவப்பிரகாசம், புஷ்பராஜ், முன்னாள் ஒன்றியச் செயலா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments