முகப்பு
பெரம்பலூர்

திமுகவினா் சாலை மறியல்: 43 போ் கைது

Updated On : 30 ஜூன் 2026, 12:32 am IST
பெரம்பலூா் பாலக்கரை பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்த போலீஸாா்.
பகிர்:

தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா் போதைப் பொருள்கள் பயன்படுத்திய செயலைக் கண்டித்தும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரம்பலூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 43 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே திமுக மாவட்ட மாணவரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு, பெரம்பலூா் நகர போலீஸாரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள திமுக அலுவலகத்திலிருந்து ஊா்வலமாகச் சென்ற திமுகவினா், பாலக்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தங்க. கமல் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், தவெக அரசைக் கண்டித்தும், போதைப் பொருள் பயன்படுத்திய அமைச்சா் சரத்குமாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன், ஒன்றியச் செயலா்கள் எம். ராஜ்குமாா், மதியழகன் உள்பட 43 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்திருந்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments