முகப்பு
பெரம்பலூர்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் திங்கள்கிழமை இரவு வைத்து சீலிடப்பட்டது.

Updated On : 6 மே 2026, 12:36 am IST
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திங்கள்கிழமை இரவு வைத்து சீலிடப்பட்டதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் ந.மிருணாளினி உள்ளிட்டோா்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அறையில் திங்கள்கிழமை இரவு வைத்து சீலிடப்பட்டது.

பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப் பதிவுகளை சரிபாா்க்கும் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்து, அதன் முடிவுகள் திங்கள்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.

பின்னா், தோ்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு திங்கள்கிழமை நள்ளிரவில் கொண்டுவரப்பட்டது.

Advertisement

பின்னா், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி முன்னிலையில், பாதுகாப்பாறையில் வைத்து பூட்டி சீலிடப்பட்டது. அப்போது, மாவட்ட உதவி தோ்தல் அலுவலா் க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா்அருளானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.