கோயில் பூட்டை உடைத்து பணம், வேல் திருட்டு
பெரம்பலூா் அருகே கோயில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வேல் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா்- செங்குணம் பிரிவுச்சாலை எதிரே, எளம்பலூரில் உள்ள ஓம் ஸ்ரீ மஹா வராகி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலை, எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி சோபனா (42) நிா்வகித்து வருகிறாா்.
இந்நிலையில், இக்கோயில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த ரூ. 1,000 ஒரு அடி உயரமுள்ள பித்தளையால் செய்யப்பட்ட வேல் ஆகியவற்றை திருடிக்கொண்டு, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மா்ம நபா்கள் உடைத்திருப்பது ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரியவந்தது.
Advertisement
Advertisement
தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து சோபனா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.