அறந்தாங்கி
அறந்தாங்கியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செவ்வாய்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மனித நேய மக்கள் கட்சியின் ஒன்றிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அறந்தாங்கியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செவ்வாய்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மனித நேய மக்கள் கட்சியின் ஒன்றிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் ஒன்றிய செயலாளர் அ.கிரீன் முகமது தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது அதில் அறந்தாங்கி நகரில் மற்றொறு மண்ணெண்ணை வழங்கும் நிலையம் அமைக்க வேண்டும், அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றம் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்காமல் இருப்பதை கண்டித்தும், காரணியேந்தல் கிராமத்தில் புதிய ரேசன் கடை அமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிர்வாகம் செயல்படுத்தாததை கண்டிóத்தும் செவ்வாய் கிழமை மாலை அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்துல்ஹமீது, துணைச் செயலாளர் பி.அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் முன்னாள் மண்டல செயலாளர் இ.முபாரக் அலி சிறப்புரையாற்றினார்.
Advertisement
Advertisement
நகரச்செயலாளர் எம்.ஜகுபர் சாதிக், நகரப் பொருளாளர் எம்.கலந்தர் மைதீன், நகரத் துணைத் தலைவர் சாகுல் அமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக நகரத் தலைவர் எம்.பி.சேக் இஸ்மாயில் வரவேற்றார், நகரச்செயலாளர் எஸ்.அஜ்மீர் கான் நன்றி கூறினார்.