பணியின்போது மரணம்: தலைமை காவலர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி
புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த இரண்டு தலைமை காவலர்களின்
புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த இரண்டு தலைமை காவலர்களின் வாரிசுகளுக்கு கருணை நியமனப் பிரிவின் கீழ் கிராம நிர்வாக அலுவலர் அரசுப் பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் திங்கள்கிழமை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. இறந்த தலைமை காவலர்களின் வாரிசுகளான மகேஷ்வரிக்கு அத்தாணி கிராம நிர்வாக அலுவலராகவும், பிரவீன் ஜான்சனுக்கு ஒக்கூர் கிராம நிர்வாக அலுவலராகவும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 253 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் கணேஷ் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல் பிரபு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.