அரசுப் பள்ளி மாணவர்களிடையே தகராறில் ஒருவர் காயம்
கந்தர்வகோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில்
கந்தர்வகோட்டை அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு மாணவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கந்தர்வகோட்டை அருகே பெருங்களூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிளஸ் 1 படிக்கும் பெருங்களூரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் ராஜாவுக்கும், அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் முருகேசன் மகன் கிருஷ்ணமூர்த்திக்கிடையே தகராறு ஏற்பட்டதில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கிருஷ்ணமூர்த்திக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கிருஷ்ணமூர்த்தி சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் தந்தை முருகேசன் ஆதனக்கோட்டை போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜாவைக் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.