முகப்பு
புதுக்கோட்டை

புதுகை, கீரமங்கலத்தில் ஜூலை 23 மின் தடை

புதுக்கோட்டை, கீரமங்கலம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் திங்கள்கிழமை (ஜூலை 23) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 23 ஜூலை 2018, 9:19 am IST
பகிர்:

புதுக்கோட்டை, கீரமங்கலம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் திங்கள்கிழமை (ஜூலை 23) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராமசாமி, கீரமங்கலம் உதவி செயற்பொறியாளர் அ.சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:   புதுக்கோட்டை துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ராஜகோபாலபுரம், கம்பன்நகர், பெரியார்நகர், பூங்காநகர், கூடல்நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லாத்திரக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
அதேபோல, கீரமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், எல்.என்.புரம், சேந்தன்குடி, வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம் புதுப்பேட்டை, பனங்குளம் நகரம், செரியாலூர், ஜெமீன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments