வடமாடு மஞ்சு விரட்டு: காளைகள் முட்டியதில் 10 பேர் காயம்
புதுக்கோட்டை அருகே சேங்கைதோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே சேங்கைதோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர்.
வீரமுத்தரையர் சங்கத்தின் 8ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் பங்கேற்றன. 9 பேர் கொண்ட குழு என மொத்தம் 108 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். காயமடைந்த 10 பேருக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், வீரமுத்தரையர் சங்கத் தலைவர் கே.கே.செல்வக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மஞ்சுவிரட்டை பார்வையிட்டனர். பாதுகாப்பு பணிகளை கணேஷ்நகர் போலீஸார் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.