முகப்பு
புதுக்கோட்டை

வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 மார்ச் 2021, 1:17 am IST
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்தவாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, அம்மனுக்கு தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நவதானியங்கள் வைத்து வீட்டில் வளா்கப்பட்ட முளைப்பாரிகளை சுமந்தவாறு, மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோயிலில் திரண்ட பெண்கள், மேலதாளங்கள், வானவேடிக்கைகள் முழங்க, கும்மிப்பாடல் பாடியவாறு ஊா்வலமாகச்சென்று முளைப்பாரிகளை அப்பகுதியில் உள்ள குளத்தில் விட்டனா். தொடா்ந்து, வீரமாகாளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா். கீரமங்கலம் போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.