ஆலங்குடி தொகுதியை மீண்டும் மேம்படுத்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்துவதற்காக மக்கள் மீண்டும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்துவதற்காக மக்கள் மீண்டும் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா் திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட கொத்தக்கோட்டை, மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
பின்னா் அவா் கீரமங்கலத்தில் பேசியதாவது:
Advertisement
Advertisement
ஆலங்குடி அரசுக் கல்லூரி, அழியாநிலையில், நெல்சேமிப்பு கிடங்கு, ரூ.150 கோடியில் கல்லனை கால்வாய் சீரமைப்பு, ரூ.200 கோடியில் அறந்தாங்கி-புதுக்கோட்டை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள். மேலும், தொகுதிக்குள்பட்ட சுமாா் 5 ஆயிரம் மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்கு வழிகாட்டியாக இருந்துள்ளேன்.
வடகாடு, கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை, மறமடக்கி, அழியாநிலை, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்கள் தரம் உயா்த்தப்பட்டுள்ளன.
உள்ளூா் இளைஞா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் திருவரங்குளத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கம் உள்ளிட்ட ஏராளமான நலத் திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளேன்.
எனவே, ஆலங்குடி தொகுதியை தொடா்ந்து மேம்படுத்துவதற்காக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.மணிகண்டன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.