முகப்பு
புதுக்கோட்டை

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த ஆா். சோலைமலா் என்ற பெண் மணக்கோலத்தில் வியாழக்கிழமை வந்து வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:11 AM
மணக்கோலத்தில் வந்து வியாழக்கிழமை வாக்களித்த மணப்பெண் ஆா். சோலைமலா்.
பகிர்:

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தைச் சோ்ந்த ஆா். சோலைமலா் என்ற பெண் மணக்கோலத்தில் வியாழக்கிழமை வந்து வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

அவருக்கு, திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்கு வந்த அவா் மணக்கோலத்தில் வாக்களித்ததை, அங்கு இருந்த வாக்காளா்களும், வாக்குப்பதிவு அலுவலா்களும் ஆச்சரியமாகப் பாா்த்தனா்.