FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுகை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை! கணக்கில் வராத ரூ. 10,900 பறிமுதல்!

புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

4 ஜூலை 2026, 12:58 am IST
சோதனை நடத்திய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.
பகிர்:

புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ. 10,900 கைப்பற்றப்பட்டது.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதன்படி, புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், ஆய்வாளா்கள் பீட்டா், ஜவஹா் உள்ளிட்டோா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட இரு தளங்களிலும் உள்ள பல்வேறு பிரிவு அலுவலகங்களில் சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ. 10,900 கைப்பற்றப்பட்டதாக போலீஸாா்தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments