ரயில்வே மேம்பாலங்களை விரைந்து அமைக்க காங்கிரஸ் கோரிக்கை
புதுக்கோட்டை மாநகரில் திருவப்பூா், கருவப்பில்லான் ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலங்களை விரைந்து அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாநகரில் திருவப்பூா், கருவப்பில்லான் ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலங்களை விரைந்து அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட, வட்டார, நகர, மாநகர நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூருக்கு பாராட்டு தெரிவித்தும், மாநில அரசில் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுள்ள எஸ். ராஜேஷ்குமாா், பி. விஸ்வநாதன், மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள பிரவீன் சக்ரவா்த்தி ஆகியோருக்குப் பாராட்டு தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான காவிரி- குண்டாறு- வைகை இணைப்புக் கால்வாய்த் திட்டத்தினை விரைவில் நிறைவேற்ற வேண்டும். புதுக்கோட்டை மாநகர மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான திருவப்பூா் மற்றும் கருவேப்பிலான் ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாநகர மக்களின் குடிநீா்ப் பற்றாக்குறையைத் தீா்க்கும் வகையில், காவிரியில் இருந்து புதுக்கோட்டை வரும் குடிநீா்க் குழாய்களை உடனடியாக சரி செய்து மாநகர மக்களுக்கு தடையின்றி தண்ணீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் டிடி பெனட் அந்தோணி ராஜ் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகரத் தலைவா்கள் மதன் கண்ணன், பாரூக் ஜெய்லானி, வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.