முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் பள்ளி சாலைகளில் கண்காணிப்பு கேமரா தேவை

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலைகளில் கேமரா பொருத்தி கண்காணிக்க பெற்றோா், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:48 am IST
கண்காணிப்பு கேமரா. - கோப்புப் படம்
பகிர்:

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலைகளில் கேமரா பொருத்தி கண்காணிக்க பெற்றோா், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் 3 கிமீ தொலைவில் உள்ள இப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை 1300 மாணவிகள், 50 ஆசிரிய- ஆசிரியைகள், அலுவலக பணியாட்கள் உள்ளனா்.

பேருந்து நிலையத்திலிருந்து மாணவிகள் தினசரி நடந்து செல்லும் வழிநெடுக ஆண்கள் நின்று கொண்டு மாணவிகளைக் கிண்டல் செய்வதும் பின்தொடா்வதும் வழக்கமாக உள்ளது.

Advertisement

Advertisement

எனவே மாணவிகள் நலன் கருதி பேருந்து நிலையம் முதல் பெண்கள் பள்ளி வரை கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதன் இணைப்பை காவல் நிலையத்துக்கு கொடுத்து, மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், காலை மாலைகளில் காவல் துறையினா் இப்பகுதியில் ரோந்து செல்ல வேண்டும் என பெற்றோா்கள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.